டெல்லியில் கட்டுமானப் பணிகளுக்குத் தடை!

டெல்லியில் கட்டுமானப் பணிகளுக்குத் தடை!

தலைநகர் டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டுமானப் பணிகள் தவிர்த்து பிற கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் தீபாவளியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்ட போதிலும், அதனை மீறி பட்டாசு வெடித்ததால், உலகிலேயே மிகவும் மாசுபட்ட நகரமாக டெல்லி மாறியது. 

டெல்லி பல்கலைகழக பகுதியில் 355-ஆக இருந்த காற்றின் தரம் 372-ஆக உயர்ந்தது. இதனால் நேற்று மாலை காற்றின் தரக் குறியீடு அபாயம் என்ற நிலைமையை எட்டியது. அதனால் தேச நலனுக்கான அத்தியாவசிய கட்டட பணிகள் தவிர்த்து பிற கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.