பட்டியலினப் பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த நால்வர் மீது வழக்குப் பதிவு:

இரு சாதியினருக்கு இடையில் நடந்த தண்ணீர் தகராறில், பட்டியலினப் பெண்ணைப் பாலியல் வன்புணர்வு செய்ததாகக் கூறி நால்வர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பட்டியலினப் பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த நால்வர் மீது வழக்குப் பதிவு:

உத்தரபிரதேச மாநிலத்தின் அலிகர் பகுதியில், இரு பிரிவினருக்கு இடையில், வயலுக்கு நீர் பாய்ச்சுவது குறித்து தகராறு நடந்துள்ளது. அதற்கிடையில், 38 வயது பட்டியலினப் பெண்ணின் ஆடை அகற்றி பாலியல் வன்புணர்வு செய்ததாகப் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, குற்றம் சாட்டப்பட்ட நால்வர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேர் மீது, IPC பிரிவுகள், 323 (தானாக முன்வந்து காயப்படுத்துதல்), 354 (B) (எந்தவொரு பெண்ணையும் தாக்கும் அல்லது குற்றவியல் சக்தியைப் பயன்படுத்துதல் அல்லது அவளை நிர்வாணமாக இருக்க வற்புறுத்தும் நோக்கத்துடன் அத்தகைய செயலுக்குத் தூண்டுதல்), 307 (கொலை செய்ய முயற்சி), 504 (அமைதியை கெடுக்கும் நோக்கத்துடன் வேண்டுமென்றே அவமதிப்பு), 506 (குற்றமிடுதல்) மற்றும் SC/ST சட்டத்தின் பிரிவு 3 (2), ஆகியவற்றின் கீழ் ஹர்துவாகஞ்ச் காவல் நிலையத்தில் போலீசார் FIR பதிவு செய்தனர்.

தனது மகன்களுக்கும், எதிர் பிரிவனருக்கும் இடையிலான சண்டையைக் குறித்து அறிந்து, வயலுக்கு வந்ததாகக் கூறிய பாதிக்கப்பட்ட் பெண்,  “அங்கு நான் சென்ற போது, எனது மக்ன்களை எதிர் பிரிவினர் அடித்துக் கொண்டிருந்தனர். அதனைத் தடுக்கச் சென்ற என்னை மதிக்காமல், என்னையும் அடித்து, எனது ஆடைகளைக் கிழித்து விட்டனர்” எனக் கூறினார்.

இந்த தகராறில், மேலும் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவித்த போலீசார், அது குறித்தும் வழக்குப் பதிவு செய்துள்ளதாகக் கூறினர்.

இது குறித்து எஸ் பி பலஷ் பன்சால், காயமடைந்த இருவரும் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாகத் தெரிவித்தார். மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்ய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்த விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.