செயற்கையான பால் தட்டுப்பாட்டை உண்டாக்குகிறதா புதுச்சேரி அரசு? முகவர்கள் குற்றச்சாட்டு!

செயற்கையான பால் தட்டுப்பாட்டை உண்டாக்குகிறதா புதுச்சேரி அரசு? முகவர்கள் குற்றச்சாட்டு!

புதுச்சேரி அரசின் கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனமான பாண்லே மூலம் பால் விற்பனை செய்யும் முகவர்களுக்கு எவ்வித காரணமுமின்றி விற்பனைக்கான பாலின் அளவை குறைத்து வழங்கப்பட்டு வருகிறது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு தேவையான பால் பாக்கெட் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் தனியார் நிறுவன பால் பாக்கெட்டுகளை வாங்கக்கூடிய நிலையை பாண்லே நிர்வாகம் ஏற்படுத்தி உள்ளது.  

இதனை கண்டித்தும், தட்டுப்பாடு இல்லாமல் பால் விற்பனையாளர்களுக்கு பால் பாக்கெட் வழங்க வலியுறுத்தியு ஏஐடியுசி பாண்லே பால் விற்பனை தொழிலாளர் சங்கத்தினர் சட்டமன்றம் அருகே காலி பெட்டிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பாண்லே நிர்வாகத்திற்கு எதிராக கண்டன கோஷ்ங்களை எழுப்பினர்.