அமித்ஷாவை சந்தித்து ஏன்? – பஞ். மாஜி முதல்வர் அமரிந்தர் சிங் விளக்கம்…  

அமித் ஷாவுடன் வேளாண் சட்டங்கள் மற்றும் விவசாயிகள் போராட்டம் குறித்து ஆலோசனை நடத்தியதாக, அமரிந்தர் சிங்கின் ஊடக ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் சித்துவுடன் ஏற்பட்ட மோதல் போக்கு காரணமாக முதலமைச்சர் பதவியில் இருந்து விலகிய அமரிந்தர் சிங், பா.ஜ.க. மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷாவை நேரில் சந்தித்தார். வேறு எந்த கட்சியிலும் இணையும் திட்டம் தமக்கு இல்லை என்று கூறி வந்த அவர், அமித்ஷாவை சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு யூகங்களுக்கு வழி வகுத்துள்ளது. இந்த சந்திப்பு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அமரிந்தர் சிங்  ஊடக ஆலோசகர், நீண்ட காலமாக நடைபெற்று வரும் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் குறித்து ஆலோசனை நடத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.

வேளாண் சட்டங்களை ரத்து செய்து, குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உறுதியளித்து, பிரச்சனையை உடனடியாகத் தீர்க்குமாறு, அமித் ஷாவை அமரிந்தர் சிங் வலியுறுத்தியதாக கூறியுள்ளார்.