ஹிஜாப் தீர்ப்பு குறித்து கர்நாடக அரசு கூறுவதென்ன...??!!

ஹிஜாப் தீர்ப்பு குறித்து கர்நாடக அரசு கூறுவதென்ன...??!!

கர்நாடகாவில் இந்தாண்டு தொடக்கத்தில் ஹிஜாப்புடன் பள்ளிக்கு வந்த மாணவிகள் சிலர், வகுப்புகளுக்கு அனுமதிக்கப்படாத விவகாரம் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தது. இந்த சம்பவத்திற்கு எதிராகவும், ஆதரவாகவும் பல குரல்களும், போராட்டங்களும் வெடிக்க ஆரம்பித்தது. 

உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல்:

பிப்ரவரி 5-ம் தேதி பள்ளி, கல்லூரிகலுக்கு சீருடையில் மட்டுமே மாணவ, மாணவிகள் வர வேண்டும் என்று மாநில அரசு உத்தரவிட்டது. வகுப்பறைகளில் மாணவிகள் ஹிஜாப் அணிய அனுமதி கோரி மாநில உயர்நீதிமன்றத்தில் கல்லூரி மாணவிகள் பலர் மனு தாக்கல் செய்தனர். 

தடை விதித்து உத்தரவு:

அந்த மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்றம் வகுப்பறைகளில் மாணவிகள் ஹிஜாப் அணியத் தடை விதித்து மார்ச் மாதம் 15-ம் தேதி உத்தரவிட்டது. 

உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல்:

இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மாணவிகள் சிலர் மனு தாக்கல் செய்திருந்தனர். அவர்களின் மனுக்கள் மீதான விசாரணை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 

இன்று தீர்ப்பு:

10 நாட்கள் இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதான்ஷூ தூலியா ஆகியோர் அடங்கிய அமர்வு, வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படும் என அறிவித்திருந்தனர். 

ஹிஜாப்பிற்கு தடையில்லை:

ஆனால் சுதான்ஷூ தூலியா, கர்நாடக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு செல்லாது எனக் கூறி அந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளார். 

மேலும் தெரிந்துகொள்க:   ஹிஜாப் தடையை நீக்க கோரி நீதிபதி துலியா முன்வைக்கும் கருத்துகள் என்னென்ன...யார் இந்த நீதிபதி துலியா?!!

ஹிஜாப்பிற்கு தடை:

இந்த நிலையில், இன்று காலை நீதிபதிகள் தங்கள் தீர்ப்பினை வழங்கினர். அதில் நீதிபதி ஹேமந்த் குப்தா ஹிஜாப்பிற்கு தடை விதித்த கர்நாடக உயர்நீதிமன்றத்தின் உத்தரவு சரி என தீர்ப்பு வழங்கியுள்ளார். 

மேலும் தெரிந்துகொள்க:   ஹிஜாப் தடையை நியாயப்படுத்தி நீதிபதி குப்தா கேட்ட கேள்விகள்... !!! யார் இந்த ஹேமந்த் குப்தா?!

தீர்ப்பு குறித்து கர்நாடக அரசு: 

இந்த முடிவு குறித்து கர்நாடக கல்வி அமைச்சர் பி.சி.நாகேஷ் கூறுகையில், ”உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறோம். உலகெங்கிலும் உள்ள பெண்கள் ஹிஜாப் மற்றும் புர்கா அணிய வேண்டாம் என்று உரிமை கோரி வரும் நிலையில், சிறந்த தீர்ப்பை எதிர்பார்த்தோம். கர்நாடக உயர்நீதிமன்றத்தின் உத்தரவு இடைக்காலத்திலும் அமலில் இருக்கும்.” என்று கூறினார்.  

மேலும் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதை ஆதரிக்கும் அமைப்புகள் குறித்து கேள்வி எழுப்பியதற்கு, ”அவர்கள் எப்போதும் இந்த சமூகத்தை பிளவுபடுத்த விரும்புகின்றனர்.  சமூகத்தை பிளவுபடுத்த ஹிஜாப்பை பயன்படுத்துகிறார்கள்.” என்று அமைச்சர் தெரிவித்தார்.  

கர்நாடகா காவல்துறையின் அறிக்கை:

உடுப்பி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அக்‌ஷய் ஹகே, போலீஸ் மறியல் மற்றும் முக்கியமான பகுதிகளில் தொடர்ச்சியான ரோந்து போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் கூறினார். சமூகத்தில் நிலவும் அமைதியை சீர்குலைக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படாமல் இருக்க சமூக ஊடகங்களும் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன எனவும் தெரிவித்தார்.

                                                                                             - நப்பசலையார்

இதையும் படிக்க:   ‘ஹிஜாப்’ வழக்கும்... கடந்து வந்த பாதையும்...