ஹிஜாப் தடையை நியாயப்படுத்தி நீதிபதி குப்தா கேட்ட கேள்விகள்...!!! யார் இந்த ஹேமந்த் குப்தா?!

ஹிஜாப் தடையை நியாயப்படுத்தி நீதிபதி குப்தா கேட்ட கேள்விகள்...!!!  யார் இந்த ஹேமந்த் குப்தா?!

கர்நாடக ஹிஜாப் வழக்கில் ஹிஜாப் தடையை நீதிபதி ஹேமந்த் குப்தா உறுதி செய்தார். அதே நேரத்தில், தடையை தொடர கர்நாடக உயர் நீதிமன்றத்தின் உத்தரவை நீதிபதி சுதன்ஷு துலியா ரத்து செய்தார்.

கர்நாடகாவில் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் தடைக்கு எதிரான மனுக்கள் மீது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இருவர் தனித்தனியாக தீர்ப்பு வழங்கியுள்ளனர். இதனால் இந்த வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது.  

மேலும் தெரிந்துகொள்க:   ஹிஜாப்பிற்கு தடை.. ஹிஜாப்பிற்கு தடையில்லை.. உச்சநீதிமன்ற இரு நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பு..!

இன்று ஹிஜாப் தடை தொடர்பான வழக்கு விசாரனைக்கு வந்த நிலையில் நீதிபதி ஹேமந்த் குப்தா ஹிஜாப் தடையை உறுதி செய்தார். அதே நேரத்தில், தடையை தொடர கூறிய கர்நாடக உயர் நீதிமன்றத்தின் உத்தரவை நீதிபதி சுதன்ஷு துலியா ரத்து செய்தார். 

நீதிபதி ஹேமந்த் குப்தா தடையை ஏன் நியாயப்படுத்தினார்? என்ன காரணத்தால் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை அவர் ரத்து செய்துள்ளார்? என்பதை தெரிந்து கொள்வோம்!!

குப்தா கேட்ட கேள்விகள்:

நீதிபதி ஹேமந்த் குப்தா கூறுகையில், எங்களது கருத்து வேறு. எனது உத்தரவில் 11 கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. 

1.  மாணவர்களுக்கு அரசியலமைப்பின் பிரிவுகள் 19, 21 மறுக்கப்பட்டதா?

2.  25 வயதிற்குட்பட்டவர்கள் ஆடைகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை வழங்கலாமா? 

3.  பிரிவு 25ன் வரம்பு என்ன? 

4.   தனிமனித சுதந்திரம் மற்றும் தனியுரிமைக்கான உரிமையை எப்படி வரையறுப்பது? 

5.  இந்த விவகாரத்தை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டுமா? 

6.  மாணவர்கள் சீருடை அணிகிறார்களா அல்லது ஹிஜாப் அணிகிறார்களா என்பது குறித்து கல்லூரி நிர்வாகம் ஏதாவது முடிவு எடுக்க முடியுமா?
 
7.  அரசின் உத்தரவால் அடிப்படை உரிமைகள் மீறப்படுகிறதா? 

8.  இஸ்லாத்தின் கீழ் தேவையான மத நடைமுறையின் சரியான பகுதியை அணிந்திருப்பதால் மாணவர் தனது அடிப்படை உரிமையைப் பயன்படுத்தாமல் இருக்க முடியுமா? 

9.  அரசு உத்தரவு கல்வியை அணுகும் நோக்கத்தை நிறைவேற்றுகிறதா? 

”என்னைப் பொறுத்தவரை, பதில் மனுதாரருக்கு எதிரானது.  மேல்முறையீட்டை தள்ளுபடி செய்கிறேன். மாறுபட்ட கருத்துகளைக் கருத்தில் கொண்டு, பொருத்தமான வழிகாட்டுதலுக்காக இந்த விஷயத்தை தலைமை நீதிபதி முன் வைக்கலாம்.” என்று தெரிவித்துள்ளார் நீதிபதி குப்தா.


யார் இந்த நீதிபதி ஹேமந்த் குப்தா?:
 

நீதிபதி ஹேமந்த் குப்தா, மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்துள்ளார். நீதிபதி குப்தா பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாகவும், பாட்னா உயர்நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதியாகவும் இருந்துள்ளார். அதன் பிறகு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி ஆக்கப்பட்டார்.

உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயது 62 ஆகும். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 65 வயதில் ஓய்வு பெறுகிறார்கள்.

                                                                                      - நப்பசலையார்

இதையும் படிக்க:   ”பாஜக என்ற ஒரு கட்சி....” செய்தியாளர் சந்திப்பில் கருத்து கூறிய அண்ணாமலை!!