கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து மேற்குவங்க அரசு மேல்முறையீடு...

சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து மேற்குவங்க அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து மேற்குவங்க அரசு மேல்முறையீடு...

 சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து மேற்குவங்க அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

மேற்கு வங்கத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று ஆட்சியை தொடர்ந்தது. ஆனால், தேர்தலுக்கு பிறகு பல்வேறு பகுதிகளில் வன்முறைகள் ஏற்பட்டன. இதில் மனித உரிமை மீறல்களும் நடந்தன. வன்முறைகள் தொடர்பாக ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளும் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டினர்.   

இந்நிலையில், மனித உரிமைகள் ஆணையத்தின் அறிக்கையை ஆய்வு செய்த கொல்கத்தா உயர் நீதிமன்றம், மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறைகள் தொடர்பான விசாரணையை சிபிஐ-யிடம் ஒப்படைக்கும்படி மாநில காவல்துறைக்கு உத்தரவிட்டது. மாநில காவல்துறை ஆளுங்கட்சிக்கு சாதகமாக நடந்துகொள்வதாக குற்றம்சாட்டியது. தொடர்ந்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து மேற்குவங்க அரசு மேல்முறையீடு செய்துள்ளது.