உ.பி. சட்டப்பேரவைக்கு இன்று 4-ம் கட்ட வாக்குப்பதிவு...காலை 7 மணி முதலே தொடங்கிய விறுவிறுப்பான வாக்குப் பதிவு!!

உத்தர பிரதேசத்தில் 4-ஆம் கட்டமாக 59 தொகுதிகளுக்கு இன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

உ.பி. சட்டப்பேரவைக்கு இன்று 4-ம் கட்ட வாக்குப்பதிவு...காலை 7 மணி முதலே தொடங்கிய விறுவிறுப்பான வாக்குப் பதிவு!!

உத்தர பிரதேசத்தில் இதுவரை 3 கட்டத் தோ்தல்கள் நிறைவடைந்துள்ளன. 4-ஆவது கட்டமாக 9 மாவட்டங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு இன்று தோ்தல் நடைபெறுகிறது. தோ்தலுக்கான பிரசாரம் நேற்று முன்தினம் மாலையுடன் நிறைவடைந்தது.  காலை 7 மணிக்குத் தொடங்கும் வாக்குப் பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

தோ்தலுக்கான முன்னேற்பாட்டுப் பணிகளைத் தோ்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. கொரோனா தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு வாக்குச் சாவடிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்காளா்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டிருப்பதோடு அவா்களுக்குக் கையுறையும் வழங்கப்படவுள்ளது.

தோ்தல் நடைபெறும் பகுதிகளில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா். அவா்களுடன் இணைந்து துணை ராணுவப் படையைச் சோ்ந்த 860 கம்பெனி படையினரும் பாதுகாப்பில் ஈடுபடவுள்ளனா். 137 வாக்குச் சாவடிகளைப் பெண்கள் மட்டுமே நிா்வகிக்க உள்ளனா். அந்த வாக்குச் சாவடிகளில் பாதுகாப்புப் பணியிலும் பெண் காவலா்களே ஈடுபடுத்தப்படவுள்ளனா்.