விவசாயிகள் மீது கார் ஏறியதன் வீடியோ வெளியாகி வைரல்...    

உத்தரபிரதேசத்தின் லக்கிம்பூர் கெரி பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது கார் ஏறியதன் பிரத்தியேக வீடியோ இணையத்தில் வெளியேகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தில் அரசு விழாவில் பங்கேற்க வந்த மாநில துணை முதல்வருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது கார் ஏறி இறங்கியதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் போராட்டக்காரர்கள் மீது கார் ஏறியதன் பிரத்தியேக வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

25 வினாடிகள் வரை ஓடும் இந்த வீடியோவில் காரை ஓட்டுபவர், மற்றும் காரில் பயணிப்பவர் குறித்து தெளிவாக தெரியவில்லை. கார் ஏறி இறக்கியது தொடர்பாக மத்திய இணை அமைச்சர் அஜ்ய் மிஸ்ரா மகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வீடியோவானது வெளியாகியுள்ளது.

https://twitter.com/INCIndia/status/1445087199653888009?ref_src=twsrc%5Egoogle%7Ctwcamp%5Eserp%7Ctwgr%5Etweet

இதனை காங்கிரஸ் தனதுடிடுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துக் கொண்டுள்ளது.