உ.பி. குஷிநகரில் சர்வதேச விமான நிலையம்- திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி  

உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகரில் கட்டப்பட்டுள்ள சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.

உ.பி. குஷிநகரில் சர்வதேச விமான நிலையம்-  திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி   

உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகரில் கட்டப்பட்டுள்ள சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.

உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாருக்கு உள்பட்ட மாவட்டங்களுக்கும் பெரிதும் பயன்படுவதுடன், அப்பகுதியில் முதலீடு மற்றும் வேலைவாய்ப்புகள் உருவாக்குவதையும் ஊக்குவிக்கும் வகையில், சர்வதேச விமான நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தின் குஷிநகரில் கட்டப்பட்டுள்ள இந்த விமான நிலையத்தை பிரதமர் மோடி இன்று காலை 10 மணிக்கு திறந்து வைக்கிறார். பிறகு, அங்குள்ள பரிநிர்வானா கோயிலில் நடைபெறும் அபிதம்மா நாள் விழாவில் கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்கிறார்.

மேலும்,  குஷிநகரில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில் பங்கேற்று, பல்வேறு மேம்பாட்டுப் பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். சர்வதேச விமான நிலையத்தைத் திறந்து வைத்த பிறகு, முதல் விமானமாக இலங்கையின் கொழும்புவிலிருந்து வரும் பயணிகள் விமானம் தரையிறங்க உள்ளது. குஷிநகர் சர்வதேச விமான நிலையத் திறப்பு விழாவைக் குறிக்கும் வகையில், இலங்கை தலைநகர் கொழும்பு விமான நிலையத்திலிருந்து வரும் விமானம் முதலில் தரையிறங்குகிறது.

குஷிநகர் சர்வதேச விமான நிலையம் 260  கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. புத்தபிரான் மகாபரிநிர்வானா அடைந்த இடத்தைப் பார்வையிட வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கு வசதியாக இது அமைவதுடன், உலகெங்கும் உள்ள புத்தரின் யாத்திரைத் தலங்களை இணைக்கும் வகையிலும் செயல்படும்.