உ.பி. முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் காலமானார்...  குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்...

உத்தர பிரதேச முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங் மறைவிற்கு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

உ.பி. முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் காலமானார்...  குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்...

உத்தர பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான கல்யாண் சிங், உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார்.  கடந்த சில மாதங்களாக உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்தார். லக்னோவில் உள்ள சஞ்சய்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்றிரவு காலமானார்.

கல்யாண் சிங் கடந்த 1991-ம் ஆண்டு முதல் 1992 வரையிலும், 1997-ம் ஆண்டு முதல் 1999-ம் ஆண்டு வரை உத்தர பிரதேச மாநில முதலமைச்சராக இருந்தார். மேலும், அவர் ராஜஸ்தான் மாநில ஆளுனராகவும் செயல்பட்டுள்ளார்.

இந்நிலையில், கல்யாண் சிங் மறைவிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள பதிவில், கல்யாண் சிங்  தூய்மையான அரசியலையும், குற்றவாளிகள் மற்றும் ஊழலையும் தூய்மைப்படுத்தினார் என்றும், அவரது மறைவு பொது வாழ்க்கையில் ஒரு வெற்றிடத்தை விட்டுச்செல்கிறது எனவும்  தெரிவித்துள்ளார்.