யுஜிசியின் புதிய முயற்சி.. 48 வெளிநாட்டு பல்கலைகழகங்கள் விருப்பம்!!

யுஜிசியின் புதிய முயற்சி..  48 வெளிநாட்டு பல்கலைகழகங்கள் விருப்பம்!!

இந்தியாவில் இரட்டை பட்ட படிப்புகளுக்கான யுஜிசியின் புதிய முயற்சிக்கு 48 வெளிநாட்டு பல்கலைகழகங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன. ஒரே நேரத்தில் இரண்டு பட்டப் படிப்புகளை படிக்கும் வாய்ப்பை யுஜிசி சமீபத்தில் அறிவித்திருந்தது.

மாணவர்கள் தங்களுடைய பன்முகத் திறமையை வளர்த்து கொள்ளவே, ஒரே நேரத்தில் இரண்டு பட்டப் படிப்புகளை படிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் பல்கலை மானியக் குழு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டிருந்தது.

யுஜிசியின் இந்த புதிய முயற்சிக்கு 48 வெளிநாட்டு பல்கலைகழகங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன. இந்திய உயர்கல்வியை சர்வதேச மயமாக்குவதற்கான மத்திய அரசின் முயற்சிக்கு ஊக்கமளிக்கும் வகையில் இரட்டை பட்ட படிப்புகளுக்கு 48 வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன.

இதில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த டீக்கின் பல்கலைக்கழகம், இரட்டை பட்ட படிப்புகளுக்கான கல்வி ஒத்துழைப்பிற்கான சாத்தியக்கூறுகள் பற்றி விவாதிக்க தனது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ள நிலையில் அது குறித்து இந்திய உயர்கல்வி ஒழுங்குமுறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.