பெங்களூர் - மைசூர் இடையே பயணிக்கும் திப்பு எக்ஸ்பிரஸ்...! பெயர் மாற்றம்..!

பெங்களூர் - மைசூர் இடையே இயக்கப்படும் திப்பு எக்ஸ்பிரஸின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பெங்களூர் - மைசூர் இடையே பயணிக்கும் திப்பு எக்ஸ்பிரஸ்...! பெயர் மாற்றம்..!

பெங்களூர் - மைசூர் வழித்தடத்தில் இயங்கி வந்த பிரபலமான ரயில் திப்பு எக்ஸ்பிரஸ். பெங்களூரிலிருந்து மைசூருக்கு இரண்டரை மணி நேரத்தில் செல்லும் இந்த திப்பு எஸ்பிரஸ் ரயிலுக்கு, மைசூர் அரச குடும்பத்திற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, அஸ்வினி வைஷ்ணவ் தலைமையிலான ரயில்வே அமைச்சகத்தால் 'ஒடையார் எக்ஸ்பிரஸ்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

கடந்த 1980 ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் அந்த ரயிலின் பெயரை மாற்றம் செய்யக்கோரி மைசூர் எம்.பி.பிரதாப் சிம்ஹா உள்ளிட்ட பா.ஜ.கவினர் கோரிக்கை விடுத்திருந்தனர். அந்த வகையில் இந்த செய்தி மைசூர் எம்.பி.பிரதாப் சிம்ஹாவின் ட்விட்டர் பக்கத்தில் வெளியானது. அதில், இனி திப்பு எக்ஸ்பிரஸுக்கு பதிலாக " ஒடையார் எஸ்பிரஸ் " தங்களுக்கு சேவை செய்யும் என்றும் மைசூர் - தலகுப்பா ரயில் " குவெம்பு எக்ஸ்பிரஸ் " ஆகும். இந்த முயற்சிக்கு ஆதரவளித்த அஷ்வினி வைஷ்ணவ் மற்றும் ப்ரஹலாத் ஜோஷி ஆகியோருக்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளார். 

-- சுஜிதா ஜோதி