யோகி ஆதித்தியநாத்தின் பேச்சு தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டுள்ளது - பா.ஜ.க. விளக்கம்!!

எண்பதுக்கும் இருபதுக்குமான போர்: யோகி ஆதித்தியநாத்தின் பேச்சு தவறாக புரிந்துக் கொள்ளப்படுள்ளது - பாஜக விளக்கம்

யோகி ஆதித்தியநாத்தின் பேச்சு தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டுள்ளது - பா.ஜ.க. விளக்கம்!!

உத்தரபிரதேசத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் பெரும்பான்மை இந்துக்களுக்கும் சிறுபான்மை இஸ்லாமியர்களுக்கும் இடையேயான போர் என்பதை குறிக்கும் வகையில் எண்பதுக்கும் இருபதுக்குமான போர் என முதல்வர் யோகி ஆதித்தியநாத் பேசிய பேச்சு அரசியல் அரங்கில் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது. 

மத பிளவை ஏற்படுத்தும் வகையிலான இப்பேச்சுக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் யோகி ஆதித்தியநாத்தின் பேச்சு தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் 80 சதவீதம் பாஜக ஆதரவாளர்களுக்கும் 20 சதவீத எதிர்ப்பாளர்களுக்கும் இடையேயான போர் என்றே யோகி குறிப்பிட்டு பேசியதாக பாஜக தலைவர் அலோக் வத்ஸ் விளக்கமளித்துள்ளார்.

ஆனால் உத்திர பிரதேசத்தில் 79.73 சதவீதத்தினர் இந்துகளாகவும், 19. 26 சதவீதத்தினர் இஸ்லாமியர்களாகவும், கிறிஸ்துவர்கள் மற்றும் சீக்கியர்கள் முறையே 0.18 மற்றும் 0.32 சதவீதமாக இருப்பதால் யோகி மதத்தை முன்னிலைப்படுத்தியே பேசியிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்து கூறுகின்றனர்.