திடீரென உயர்ந்த கியாஸ் சிலிண்டர் விலை...ஆனா இவங்களுக்கு இல்லையாம்...! எவ்வளவு தெரியுமா?

உக்ரைன்-ரஷியா போர் எதிரொலியாக வர்த்தக உபயோகித்திற்கான கியாஸ் சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது.

திடீரென உயர்ந்த கியாஸ் சிலிண்டர் விலை...ஆனா இவங்களுக்கு இல்லையாம்...! எவ்வளவு தெரியுமா?

உக்ரைன்-ரஷியா இடையேயான போரின் எதிரொலியாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெயில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.  அதன்படி முதல் நாள் போரையடுத்து, கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு சுமார் 100 அமெரிக்க டாலருக்கும் கூடுதலாக உயர்ந்தது.  

இருப்பினும், தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவித மாற்றமுமின்றி விற்கப்பட்டு வருகிறது.
ஆனால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மாற்றம் ஏற்பட்டுள்ளதால், டெல்லியில் வர்த்தக உபயோகத்திற்கான கியாஸ் சிலிண்டர் விலை இன்று முதல் ரூ.105 ஆக உயர்ந்துள்ளது.  அதுவும் எடைக்கு தகுந்தவாறு இரண்டு விலையாக உயர்ந்துள்ளது.

அதாவது, 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் ஒன்றின் விலை இன்று முதல் ரூ.2,012க்கும், 5 கிலோ எடை கொண்ட சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.27 உயர்ந்து, ரூ.569க்கும் விற்கப்பட உள்ளது.  எனினும், வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படாமல் அதே விலையில் நீடிக்கிறது.

இதேபோன்று தமிழகத்திலும் வர்த்தக உபயோக கியாஸ் சிலிண்டர் விலை ரூ.105 உயர்ந்து ரூ.2,145.50 ஆக விற்கப்பட உள்ளது.  அதேசமயம் தமிழகத்திலும் வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் எந்தவித உயர்வும் இல்லை  என தெரிவிக்கப்பட்டு உள்ளது.  வழக்கம்போல் கியால் சிலிண்டர் ஒன்றின் விலை மாற்றமின்றி ரூ.915.50க்கு விற்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.