இந்தியாவில் மளமளவென குறைந்து வரும் கொரோனா தொற்று .. இன்றைய பாதிப்பு?

இந்தியாவில் தொடர்ந்து குறைந்து வருகிறது தினசரி கொரோனா பாதிப்பு

இந்தியாவில் மளமளவென குறைந்து வரும் கொரோனா தொற்று .. இன்றைய பாதிப்பு?

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 19, 968 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பை 22 ஆயிரத்து 270 ஐ விட அதிகமாகும். இந்தியாவில் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,28,22,491 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 48, 847 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 4,20,86,383 ஆக அதிகரித்துள்ளது.

இருப்பினும் கடந்த 24 மணி நேரத்தில் 673 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதன் மூலம், இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,11,230 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 2 லட்சத்து 24 ஆயிரத்து 187 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 175 கோடியே 37 லட்சத்து 22 ஆயிரத்து 697 அதிகரித்துள்ளது.