நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்த தடை...நாடாளுமன்ற செயலகம் அதிரடி உத்தரவு...!

நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்த தடை...நாடாளுமன்ற செயலகம் அதிரடி உத்தரவு...!

நாடாளுமன்றத்தின்  மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 18 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறக்கூடாது என்பதற்காக, போராட்டம் நடத்துவதற்கு நாடாளுமன்ற செயலகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறவுள்ள நிலையில் நாடாளுமன்ற செயலகம் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது:

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் வருகிற ஜூலை 18 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி வரை நடத்துவதற்கு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான துறை அமைச்சகம் திட்டமிட்டிருக்கிறது. இந்தநிலையில் திங்கட்கிழமை நடக்கவிருக்க கூடிய நாடாளுமன்ற  மக்களவை மற்றும் மாநிலங்களவை கூட்டத்தொடரில் குறிப்பிட்ட வார்த்தகளை பயன்படுத்தக்கூடாது என்று ஏற்கனவே, மக்களவை செயலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. இந்த அறிவிப்பு எதிர்க்கட்சிகளின் மத்தியில் ஒரு அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் தான் நாடாளுமன்ற செயலகம் தரப்பில் இருந்து மீண்டும் ஒரு அறிவிப்பானது வெளியிடப்பட்டிருக்கிறது.

நாடாளுமன்ற வளாகத்தில் எந்தவித போராட்டமும் நடத்தக்கூடாது:

அந்த அறிவிப்பில், நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் வருகிற ஜூலை 18 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், நாடாளுமன்ற வளாகம் அதிலும் குறிப்பாக காந்தி சிலை இருக்கக்கூடிய பகுதியில் எந்தவிதமான மத விழாக்களோ, உண்ணாவிரதம் போராட்டம், ஆர்ப்பாட்டம் என இவை எதையும் நடத்தக்கூடாது என்று மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு அவைகளின் அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் உத்தரவு என்பது பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

குடியரசு தலைவர் தேர்தல்:

அதுமட்டுமல்லாமல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறவுள்ள ஜூலை 18 ஆம் தேதியன்று குடியரசு தலைவர்களுக்கான தேர்தலும் நடைபெற இருக்கிறது. இதனால் நாடாளுமன்ற வளாகத்திலேயே தேர்தலுக்கான மையங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. இதனால்  குடியரசு தலைவர் தேர்தல் நடைபெறும் போது, மக்களவை மற்றும் மாநிலங்களவையை சேர்ந்த ஏதேனும் ஒரு கட்சி உறுப்பினர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டால் அது பெரும் அசம்பாவிதத்தை ஏற்படுத்தும், அதே சமயம் ஜனநாயகத்திற்கு ஒரு பெரிய கேள்விக்குறியான  நிலையை உண்டாக்கும் என்பதால் தான், இதையெல்லாம் ஒரு முக்கியமான காரணங்களாக குறிப்பிட்டு நாடாளுமன்றத்தில் எந்தவிதமான போராட்டமும், உண்ணாவிரதமும் நடத்துவதற்கு தற்காலிக தடை உத்தரவை நாடாளுமன்ற செயலகம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்துவதற்கு திட்டமிட்ட எதிர்க்கட்சிகள்:

நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்துவதற்கு தலைமைச் செயலாளர் பிரமோத் சந்திர மோடி உத்தரவு  பிறப்பித்துள்ள நிலையில், இந்த தடை உத்தரவு என்பது எத்தனை நாட்களுக்கு என்பது குறித்த ஒரு தெளிவான விவரங்கள் கிடைக்கவில்லை. இருப்பினும் திங்கட்கிழமை துவங்கவுள்ள கூட்டத்தொடர் முழுவதுமே போராட்டம் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக தான் சொல்லப்படுகிறது. அதற்கு காரணம் ஏற்கனவே எதிர்க்கட்சிகளின் வரிசையில் இருக்கக்கூடிய காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்துவதற்கு திட்டமிட்டிருப்பதால் தான் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போராட்டம் நடத்துவதற்கு தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியினர் குற்றச்சாட்டு:

குறிப்பாக ஜூலை 21  ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அமலாக்கத்துறை நேஷ்னல் ஹெரால்டு வழக்கில் ஆஜராக இருக்கும் நிலையில் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் இருக்கக்கூடிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து மிகப்பெரிய திரளான போராட்டத்தை நடத்துவதற்கு திட்டமிட்டிருக்கக்கூடிய  நிலையில், அதனை தடுக்கும் முயற்சியாக தான் நாடாளுமன்ற செயலகம் தரப்பில் இருந்து இப்படி ஒரு அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டிருப்பதாக காங்கிரஸ் கட்சி தரப்பிலிருந்து குற்றங்கள் சுமத்தப்பட்டு வருகிறது.

முன்னதாக நாடாளுமன்ற கூட்டத்தொடரில் குறிப்பிட்ட சொற்களை தான் பயன்படுத்த வேண்டும் என்று அறிக்கை வெளியான ஓரிரு நாட்களிலேயே, நாடாளுமன்ற வளாகத்தில் எந்தவித போராட்டமும் நடத்தக்கூடாது என்ற அறிவிப்பை நாடாளுமன்ற  தலைமைச் செயலாளர் பிரமோத் சந்திர மோடி  தரப்பில் உத்தரவானது பிறப்பிக்கப்பட்டுள்ளது.