வேளாண் சட்டம் வாபஸ் ஏமாற்றம்... சர்வாதிகாரம் மட்டுமே சரியான முடிவு... கங்கனா ரனாவத் சர்ச்சை கருத்து... 

மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் மத்திய அரசின் முடிவுக்கு அதிருப்தி தெரிவித்துள்ள நடிகை கங்கனா ரனாவத், சர்வாதிகாரம் ஒன்றே தீர்வு என கூறி இருப்பது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.  

வேளாண் சட்டம் வாபஸ் ஏமாற்றம்... சர்வாதிகாரம் மட்டுமே சரியான முடிவு... கங்கனா ரனாவத் சர்ச்சை கருத்து... 

குருநானக் தேவ் ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்களிடையே உறையாற்றிய பிரதமர் மோடி, 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு வீடு திரும்ப வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். வரும் நாடாளுமன்ற குளிர் கால கூட்ட தொடரின் போது 3 வேளாண் சட்டங்களையும் முறைப்படி திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். 

இந்த முடிவு குறித்து பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து வரும் நிலையில், சர்ச்சைக்கு பெயர் போன இந்தி நடிகை கங்கனா ரனாவத், பிரதமர் மோடியின் அறிவிப்பு ஏமாற்றம் அளிப்பதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தால் அல்லாது, தெருக்களில் இருப்போர் சட்டங்களை இயற்ற தொடங்கி விட்டால், அது  பயங்கரவாத தேசம் தான் என விமர்சித்துள்ளார்.

மேலும் இந்திரா காந்தியின் 104வது தினத்தை முன்னிட்டு அவரது புகைப்படத்தை பகிர்ந்திருந்த கங்கனா ரனாவத்,  தேசத்தின் மனசாட்சி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது, லத்தி ஒன்றே தீர்வு என்றும், சர்வாதிகாரம் மட்டுமே சரியான முடிவாக இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.