கடும் அமளிக்கு மத்தியில் நிறைவேறிய வனப் பாதுகாப்பு மசோதா!

கடும் அமளிக்கு மத்தியில் நிறைவேறிய வனப் பாதுகாப்பு மசோதா!

மணிப்பூர் விவகாரம் தொடர்பான எதிர்கட்சிகளின் கடும் அமளிக்கு மத்தியிலும், சர்ச்சைக்குரிய வனப் பாதுகாப்பு திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20 ஆம் தேதி தொடங்கிய நிலையில், பல்வேறு மசோதாக்களை தாக்கல் செய்வதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

ஆனால், கூட்டத்தொடர் தொடங்கியதிலிருந்தே மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வந்ததாலும், அதேபோல் எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களான ராஜஸ்தாஸ், மேற்கு வங்கம், ஜார்கண்ட் உள்ளிட்ட பகுதிகளிலும் பெண்கள் அச்சுறுத்தலுக்கு ஆளாவதாக கூறி ஆளும் கட்சியினரும் அமளியில் ஈடுபட்டு வருவதால் தொடர்ந்து இரு அவைகளும் முடங்கி வருகின்றன.bupendar

இந்நிலையில் இன்று நாடாளுமன்ற மக்களவையில் வன பாதுகாப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
கடும் அமளிக்கு நடுவே இந்த மசோதா மக்களைவில் நிறைவேறியது. ஏற்கனவே கடந்த மார்ச் 29ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்த வனப்பாதுகாப்பு திருத்த மசோதாவானது, நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஒப்புதலைப் பெற்றிருந்தது குறிப்பிடத் தக்கது. 

இத்திருத்தத்தின் மூலம் வனப்பகுதிகளுக்கு நடுவே மேற்கொள்ளப்படும் கட்டுமானங்களால் வனவிலங்குகள் பாதிக்கப்படுவதோடு, பழங்குடியினர் உரிமைகளும் கேள்விக்குள்ளாகும் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், வனம் என்ற வரையறையின்கீழ் உள்ள கணிசமான நிலங்களை வனம்சாரா நோக்கங்களுக்கு பயன்படுத்த எளிதில் அனுமதி அளிக்கும் வகையில் வனப் பாதுகாப்பு திருத்த மசோதாவை மத்திய அரசு முன்மொழிந்துள்ளதாவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையும் படிக்க:தாம்பரம்: மீட்கப்பட்ட இடத்தில் காவல் ஆணையர் அலுவலகம் கட்ட உயர்நீதிமன்றம் உத்தரவு!