டெஸ்லா இந்தியா நிறுவனத்தின் முதன்முறையாக நியமிக்கப்பட்ட நிர்வாகி பதவி விலகல்!!

டெஸ்லா இந்தியா நிறுவனம் சார்பில் முதன்முறையாக நியமிக்கப்பட்ட கொள்கை மற்றும் வணிக மேம்பாட்டு நிர்வாகி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

டெஸ்லா இந்தியா நிறுவனத்தின் முதன்முறையாக நியமிக்கப்பட்ட நிர்வாகி பதவி விலகல்!!

உலகின் முன்னணி எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, இந்தியாவில் மின்சார கார்களை விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தது. இதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், கொள்கை மற்றும் வணிக மேம்பாட்டு நிர்வாகியாக கடந்தாண்டு மார்ச் மாதம் மனுஜ் குரானா என்பவர் நியமனம் செய்யப்பட்டார்.

இவரது நியமனத்தின் மூலம் டெஸ்லா கார்கள் இறக்குமதிக்கு  வரி விலக்கு நூறில் இருந்து  40 சதவீதம் ஆக குறைக்கப்பட்டது. இருப்பினும் இந்தியாவில் கார்களை தயாரிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் திட்டத்துக்கு முட்டுக்கட்டை இட்டு வந்த டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், அம்முயற்சியை கிடப்பில் போட்டதாக தெரிகிறது. இதனால் அதிருப்தியில் இருந்த மனுஜ் குரானா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.