மும்பை 60 மாடி சொகுசு குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: உயிரை காப்பாற்றிக்கொள்ள பால்கனியில் தொங்கிய நபர் உயிரிழந்த நேரடி காட்சிகள் ...

மும்பையில் உள்ள 60 மாடிகள் கொண்ட சொகுசு குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் இருந்து உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக பால்கனியில் தொங்கிய நபர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவத்தின் பதைபதைக்க வைக்கும் நேரடிக் காட்சி வெளியாகியுள்ளது.

மும்பையின் கரி சலையில் அமைந்துள்ள அவிக்னா பூங்கா என்னும் அடுக்கு மாடி குடியிருப்பின் 19-வது மாடியில் இன்று நண்பகலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கொழுந்து விட்டு எரிந்த தீ, கட்டிடத்தின் மற்ற பகுதிகளுக்கும் பரவியது. இதனால் கரும்புகை வெளியேறி அப்பகுதியே புகை சூழ்ந்து காணப்பட்டது. 

தகவலறிந்து 14 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கு முயற்சியில் போராடி வருகின்றனர். மேலும் கட்டிடத்திற்குள் சிக்கி இருப்பவர்களை பத்திரமாக மீட்கவும் முய்ற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தீவிபத்தில் இருந்து உயிரைக்காப்பாற்றிக் கொள்வதற்காக பால்கனியைப் பிடித்து தொங்கிய 30 வயது இளைஞர், கீழே விழுந்து உயிரிழந்தார். இச்சம்பவத்தின் பதைபதைக்க வைக்கும் நேரடிக் காட்சி வெளியாகியுள்ளது.
breathe..