சல்மான்கானை தடுத்து நிறுத்திய வீரரின் செல்போன் பறிப்பா... விளக்கம் அளித்த சி.ஐ.எஸ்.எப்...

உச்சநட்சத்திரம் என்றும் பாராமல் சல்மான் கானை தடுத்து நிறுத்திய வீரருக்கு உரிய வெகுமதி அளிக்கப்பட்டதாக சி.ஐ.எஸ்.எப். விளக்கம்.

சல்மான்கானை தடுத்து நிறுத்திய வீரரின் செல்போன் பறிப்பா... விளக்கம் அளித்த சி.ஐ.எஸ்.எப்...

உச்ச நட்சத்திரம் என்றும் பாராமல், மும்பை விமான நிலையத்தில் நடிகர்  சல்மான்கானை தடுத்து நிறுத்தி, பாதுகாப்பு பணியை சிறப்பாக செய்த காவலருக்கு உரிய வெகுமதி அளிக்கப்பட்டதாக சிஐஎஸ்எப் தெரிவித்துள்ளது. 

அண்மையில் ‘டைகர் 3’படத்திற்காக ரஷ்யா செல்ல பாலிவுட் நடிகர் சல்மான் கான் மும்பை விமான நிலையம் வந்திருந்தார். அவரை தடுத்து நிறுத்திய மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர், பாதுகாப்பு சோதனைக்கு உட்படும்படி அறிவுறுத்தினார். இதனை ஏற்று அவரும் சோதனைக்கு உட்பட்ட வீடியோ வைரலான நிலையில், நெட்டிசன்கள் காவலரின் செயலை பாராட்டி இருந்தனர்.  

ஆனால் இந்த சம்பவத்திற்கு பின் காவலரின் செல்போன் பறிக்கப்பட்டதாக ஊடகம் ஒன்றில் தகவல் வெளியானது. இதனை ஆதாரமற்ற குற்றச்சாட்டு என மறுத்துள்ள சிஐஎஸ்எப், பணியை சிறப்பாக செய்த காவலருக்கு உரிய வெகுமதி அளிக்கப்பட்டதாக டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.