தொடர்ந்து 2வது மாதமாக ரெப்போ வட்டி விகிதம் உயர்வு.. 4.90% ஆக உயர்த்த நிதி கொள்கை குழு ஒப்புதல்!!

ரெப்போ வட்டி விகிதத்தை 4.90 சதவீதம் உயர்த்த நிதி கொள்கை குழு ஒப்புதல் வழங்கியிருப்பதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து 2வது மாதமாக ரெப்போ வட்டி விகிதம் உயர்வு.. 4.90% ஆக உயர்த்த நிதி கொள்கை குழு ஒப்புதல்!!

இந்திய ரிசர்வ் வங்கி நிதிக்கொள்கை கூட்டத்தில் கடனுக்கான வட்டி விகிதத்தை பூஜ்ஜியம் புள்ளி 40 சதவீதம்  உயர்த்த போவதாகவும், அதனைத்தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் மீண்டும் பூஜ்ஜியம் புள்ளி 35 சதவீதம் உயர்த்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.

ஒட்டுமொத்தமாக பூஜ்ஜியம் புள்ளி 75 சதவீதம் உயர்த்துவதால் வட்டி விகிதம் உயரும் என்றும், இதனால் பணவீக்கம் அதிகரிக்க கூடும் என பொருளாதார நிபுணர்கள் கவலை தெரிவித்திருந்தனர்.

இதனிடையே நிதி கொள்கை குழுவின் 3 நாள் ஆலோசனை கூட்டமானது அண்மையில் நடைபெற்றது. இந்தநிலையில் மும்பையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ், ரெப்போ வட்டி விகிதத்தில் 50 புள்ளிகள் வரை ஆதார வட்டியை உயர்த்த நிதி கொள்கை குழு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இதன் மூலம் ரெப்போ வட்டி விகிதம் 4 புள்ளி 90 சதவீதமாக உயர்வதாகவும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில் ரிசர்வ் வங்கியின் இந்த  வட்டி விகித உயர்வு பொதுமக்களுக்கு பெரும் சுமையாக இருக்கும் என கூறப்படுகிறது. 2018ம் ஆண்டுக்கு பிறகு, கடந்த மாதம் ரெப்போ வட்டி விகிதத்தில் 40 புள்ளிகள் வரை ஆதார வட்டியை உயர்த்தி 4.40 சதவீதமாக ஆர்பிஐ அறிவித்தது குறிப்பிடத்தக்கது.