டி-சர்ட் சர்ச்சையை முடித்து வைத்த ராகுல்!!!

டி-சர்ட்  சர்ச்சையை முடித்து வைத்த ராகுல்!!!

காங்கிரஸ் நிறுவன தின நிகழ்ச்சியில் ராகுல் காந்தியிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு வேடிக்கையான பதில்கள் கிடைத்துள்ளன.

இந்திய ஒற்றுமை பயணத்தின் போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டி-சர்ட் அணிந்து நடந்து செல்லும் பல படங்கள் தற்போது வரை ஆன்லைனில் வைரலாகி வருகின்றன.  தமிழ்நாட்டிலிருந்து பயணம் தொடங்கும் போது முதலே அவர் வெள்ளை டி-சர்ட்டிலேயே பயணித்து வருகிறார்.  ஆனால், குளிரிலும் ராகுல் அரை டி-ஷர்ட்டில் நடைபயணத்தை மேற்கொள்வதுதான் தற்போது பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.  இது குறித்து பாஜகவும் ராகுலை விமர்சித்துள்ளது.  

#WATCH | Congress MP Rahul Gandhi replies to a question about him wearing a T-shirt.

Reporter to Rahul Gandhi: Today also in T-shirt...

Rahul Gandhi: T-shirt hi chal rahi hai aur jab tak chal rahi hai chalayenge... pic. twitter.com/S5OB4TuKfZ

— ANI (@ANI) December 28, 2022

இன்று டெல்லியில் காங்கிரஸின் நிறுவன நாள் நிகழ்ச்சியில் ராகுல் பங்கேற்கச் சென்றபோது, ​​ஒரு பத்திரிகையாளர் அவரிடம் டி-சர்ட் குறித்து கேள்வி எழுப்பினார்.  அதாவது ”இன்றும் மீண்டும் ஏன் அதே டி-ஷர்ட்டில்?  என்ற கேள்விக்கு ராகுல் நகைச்சுவையாக கூறியதாவது, "டி-சர்ட் அதிக காலம் ஓடுகிறது.  அது ஓடும் வரை ஓடும்.  டி-ஷர்ட் வேலை செய்வதை நிறுத்தும் போது, ​​பார்த்து கொள்ளலாம்" என பதிலளித்துள்ளார்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:   அமித் ஷாவிற்கு கடிதம் எழுதிய காங்கிரஸ்...காரணம் என்ன?!!