பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ராகுல், பிரியங்கா ஆறுதல்...

உத்திர பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்றால் மத்திய இணைஅமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா வலியுறுத்தியுள்ளார்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ராகுல், பிரியங்கா ஆறுதல்...

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில், விவசாயிகள் போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் 9 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற பிரியங்கா, ராகுல் உள்ளிட்ட அரசியல் தலைவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. நீண்ட போராட்டத்துக்கு பின் லக்கிம்பூர் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளில் குடும்பத்தினரை ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். 

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ராகுல், நடந்த கொடுமைக்கு விவசாயிகளின் குடும்பத்தினர் நீதியை வேண்டுவதாகவும், இதனை யார் செய்தது என்பது அனைவருக்கும் தெரியும் எனவும் கூறினார்.  

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு தேவையில்லை, அவர்களுக்கு நீதி வேண்டும் என வலியுறுத்திய பிரியங்கா காந்தி, மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் கூறினார். இல்லையென்றால் உரிய நீதி கிடைக்க சாத்தியமில்லை எனவும் தெரிவித்தார்.