அனைத்து வகையான பட்டாசுகளும் வெடிக்க தடை: தீப ஒளிகளை பயன்படுத்த நீதிமன்றம் அறிவுரை...

கொல்கத்தாவில் பசுமை பட்டாசு உள்ளிட்ட அனைத்து வகையான பட்டாசுகளும் வெடிக்க தடை விதித்த அம்மாநில உயர் நீதிமன்றம், பண்டிகைகளை கொண்டாட எண்ணெய் மற்றும் மெழுகால் செய்யப்பட்ட தீப ஒளிகளை பயன்படுத்துங்கள் என  அறிவுரை வழங்கியுள்ளது.

அனைத்து வகையான பட்டாசுகளும் வெடிக்க தடை: தீப ஒளிகளை பயன்படுத்த நீதிமன்றம் அறிவுரை...

தீபாவளி, புத்தாண்டு என அடுத்தடுத்து பண்டிகைகள் வரவுள்ள நிலையில் பொதுமக்கள் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்கும் பண்டிகை கொண்டாடுவதற்கு பட்டாசுகளை வெடித்து கொண்டாடுவது வழக்கம், ஆனால்  பட்டாசு வெடிப்பதன் காரணமாக சுற்றுசூழல் மற்றும் காற்று மாசுபாடு ஏற்பட்டு   மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுவதாகவும்,அதனால்  பட்டாசுக்கு தடை விதிக்கப்பட வேண்டும் என்ற வழக்கு  உச்சநீதிமன்றத்தில்  நிலுவையில் இருநு்து வருகிறது.

இந்நிலையில் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் பட்டாசு வெடிப்பது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது,பசுமை பட்டாசு உள்ளிட்ட அனைத்து வகையான பட்டாசுகளும் வெடிப்பதற்கு முழுமையான தடை விதிப்பதாக உத்தரவிட்டனர்.  மேலும், பட்டாசுகளுக்கு பதிலாக மெழுகு மற்றும் எண்ணெய் பொருள்களால் ஆன தீப ஒளிகளை தங்களுடைய கொண்டாட்டத்தின் வெளிப்பாடாக பிரதிபலித்துக் கொள்ளலாம் என அறிவுரை கூறிய நீதிபதிகள், பசுமை பட்டாசு மட்டுமே பயன்படுத்தப்படுகிறதா? என்பதை கண்டறிவதில் சிக்கல் இருப்பதை கருத்தில் கொண்டு இத்தகைய தீர்ப்பு வழங்குவதாக  தெரிவித்தனர்.