விவசாயிகள் கொல்லப்பட்டதற்கு கண்டனம்: பிரியங்கா காந்தி கைது?

உத்தரப்பிரதேசத்தில் வன்முறையில் 8 பேர் உயிரிழந்துள்ள நிலையில் சம்பவ இடத்திற்கு செல்ல இருந்த காங்கிரஸ் பொதுச்செயாலாளர் பிரியங்கா காந்தியை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக உத்தரப்பிரதேசம் உள்பட பல்வேறு வட மாநிலங்களில், தொடர்ச்சியாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பான வன்முறையில், 8 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், விவசாயிகளை கொல்வதற்கு உத்தரபிரதேச அரசு, அரசியலை பயன்படுத்துவதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார். இது விவசாயிகளின் நாடு என்றும், பா. ஜ.க.வினரின் நாடு அல்ல எனவும் அவர் கடுமையாக சாடியுள்ளார். வன்முறை நிகழ்ந்த லக்கிம்பூர் பகுதிக்கு, பிரியங்கா காந்தி  செல்ல இருந்த நிலையில் அவரை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது