தேவர் ஜெயந்திக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி..!!!

தேவர் ஜெயந்திக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி..!!!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 115-வது ஜெயந்தி மற்றும் 60-வது குருபூஜை விழா தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவரின் சிலைக்கு தமிழ்நாடு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

பிரதமர் மோடி வாழ்த்து:

இந்நிலையில் பிரதமர் மோடி பெருமதிப்பிற்குரிய பசும்பொன் முத்துராமலிங்க தேவரை அவரது குருபூஜை நாளில் வணங்குகிறேன் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.  அவரது ட்விட்டர் பக்கத்தில் தமிழிலும் ஆங்கிலத்திலும் மரியாதை செலுத்தியுள்ளார் மோடி.

-நப்பசலையார்

இதையும் படிக்க:   கூட்ட நெரிசல் மரணங்கள்... நிர்வாக அலட்சியம் காரணமா..? இதுவரை நடந்துள்ள கூட்ட நெரிசல் மரணங்கள் குறித்து ஒரு அலசல்..!!!