குரங்குகளை விரட்ட லங்கூர் குரங்குகளின் போஸ்டர்!!!

பொதுமக்களை அச்சுறுத்தி வரும் குரங்குகளை விரட்ட சென்சார் கருவிகளும் லங்கூர் குரங்குகளின் போஸ்டர்களும் வைக்கப்பட்டுள்ளன.

குரங்குகளை விரட்ட லங்கூர் குரங்குகளின் போஸ்டர்!!!

மொரதாபாத் மண்டலத்திற்குட்பட்ட பேருந்து நிலையங்களுக்கு வரும் பயணிகளை அப்பகுதியில் சுற்றித் திரியும் குரங்குகள் அடிக்கடி தாக்கியும் மிரட்டியும் வருகின்றன.

இதையடுத்து,  குரங்குகளை விரட்டுவதற்காக போக்குவரத்துக் கழகம் சார்பில் மொரதாபாத் பேருந்து நிலையத்தில் நீண்ட வால் கொண்ட லங்கூர் குரங்குகளின் போஸ்டர்களும் சென்சார் கருவிகளும் வைக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம், குரங்குகளின் அச்சுறுத்தல் குறைந்துள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க | காட்டு யானைகளை பிடிக்க கும்கி வரவழைப்பு...