காட்டு யானைகளை பிடிக்க கும்கி வரவழைப்பு...

காட்டு யானைகளை பிடிக்க கும்கி வரவழைப்பு...

பாப்பாரப்பட்டி அருகே பயிர்களை சேதப்படுத்தி வரும் காட்டு யானைகளைப் பிடிக்க கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது.
Published on

தருமபுரி | பென்னாகரம் பாப்பாரப்பட்டி அருகே விலை நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியும் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வரும் காட்டு யானைகளை கடந்த நான்கு மாதமாக வனப்பகுதிக்குள் விரட்டுவதில் மெத்தனம் காட்டுவதாக வனத்துறை மீது புகார் எழுந்துள்ளது.

இதனைடுத்து வனத்துறையினர்  காட்டு யானைகளை மயக்க ஊசி செலுத்தி பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று கூறி விவசாயிகள் போராட்டமும் நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து காட்டு யானைகளை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்காக உரிய உத்தரவு பெறப்பட்டு அந்த பணிக்காக பொள்ளாச்சியில் இருந்து கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது. காட்டு யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் வல்லுனர்கள் மற்றும் கால்நடை டாக்டர்கள் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வசதிகளுடன் பாப்பாரப்பட்டியில் முகாமிட்டுள்ளனர்.

மேலும் பிக்கிலி வனப்பகுதி ஒட்டி உள்ள கிட்டம்பட்டி கிராமத்தில் உள்ள காட்டு யானைகளின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து உரிய இடத்திற்கு கொண்டு சென்று பின்னர் மயக்க ஊசி செலுத்திப் பிடித்து கும்கி யானை உதவியுடன் வாகனத்தில் ஏற்றிச் செல்ல வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com