தேர்தலுக்கு பிந்தைய வன்முறை...சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவு...

மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறை தொடர்பான வழக்கில் நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் சிபிஐ விசாரணை நடத்த கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தலுக்கு பிந்தைய வன்முறை...சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவு...

மேற்கு வங்கத்தில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் 8 கட்டங்களாக நடந்த சட்டப்பேரவை தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் கட்சி, மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் வன்முறை வெடித்தது. பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் மீது தாக்குதல், உடமைகளுக்கு சேதம், தீவைப்பு போன்ற சம்பவங்கள் அரங்கேறின.

இந்த வன்முறையில் தங்கள் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் பலர் கொல்லப்பட்டதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது. இவ்விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் இது தொடர்பான வழக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இதில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் தேர்தலுக்கு பிந்தைய வன்முறை சம்பவங்கள் குறித்து நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பாஜகவினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.