புதுச்சேரி மாநில பாஜக தலைவர் கார் கண்ணாடி உடைப்பு! வழக்கு பதிவு:

புதுச்சேரி மாநில பாஜக தலைவரின் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநில பாஜக தலைவர் கார் கண்ணாடி உடைப்பு! வழக்கு பதிவு:

புதுச்சேரி, கூடப்பாக்கம்  பகுதியில் உள்ள சிவன் கோவிலில் நடைபெற்ற  பூஜையில் பாஜக மாநில தலைவர் சாமிநாதன் கலந்து கொண்டார். பின்னர் கோவிலுக்கு வெளியே வந்து பார்த்தபோது அவரது இன்னொவா காரின் பின் பக்க கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக காரின் ஓட்டுநர் அருள் வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் கார் கண்ணாடி உடைத்த மர்ம நபர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கவும் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால்  சாமிநாதனை வரவேற்க தொண்டர்கள்  பட்டாசு வெடித்ததில் அங்கிருந்த கல் ஒன்று காரின் கண்ணாடியின் மீது விழுந்து உடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.