ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர ஆலோசனை!

குடியரசு தலைவர்  தேர்தல் தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பாஜக குழு அமைத்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு  அரசியல் கட்சிகள் தீவிர ஆலோசனை!

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம்   ஜூலை  24-ந்தேதியுடன் முடிவடைகிறது.

இதையடுத்து அடுத்த குடியரசு தலைவர் தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூலை 18-ந்தேதி நடைபெறுகிறது. குடியரசு தலைவர் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன.

காங்கிரஸ் கூட்டணி சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக ஆலோசிக்க்படப்டு வருகிறது. அதேபோல் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது  குறித்து  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று  சென்னை அண்ணா அறிவாலயத்தில் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில் குடியரசு தலைவர்  தேர்தல் தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பா ஜக குழு அமைத்துள்ளது. இந்தக் குழுவில் பா ஜக தேசியத்தலைவர் ஜேபி நட்டா, கட்சியின் மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான ரா ஜ்நாத்சிங் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்தக் குழுவினர் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளுடன் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்துவார்கள் என பா ஜக தலைமை அறிவித்திருக்கிறது.

நாடாளுமன்ற மக்களவையில் பெரும்பான்மையாக உள்ள பா. ஜ.க. மாநிலங்களவையிலும் கணிசமான இடங்களை கொண்டுள்ளது. மேலும் பா. ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆட்சி செய்யும் மாநில எம்.எல்.ஏ.க்கள் ஆதரவோடு ஜனாதிபதி பதவியை தக்க வைத்துக்கொள்ள அக்கட்சி முனைப்பு காட்டி வருகிறது.