பீகாரில் தடம் புரண்ட பயணிகள் ரயில்... 5 பயணிகள் உயிரிழப்பு!!

பீகாாில் பயணிகள் ரயில் தடம் புரண்ட பயங்கர விபத்தில் 4 போ் உயிாிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

டெல்லியின் ஆனந்த் விஹார் டெர்மினலில் இருந்து அசாமின் காமாக்யா நோக்கி அதிவிரைவு ரெயில் புறப்பட்டு சென்றது. நேற்று இரவு சுமாா் 9.35 மணியளவில் பீகாரில் உள்ள ரகுநாத்பூர் ரெயில் நிலையம் அருகே ரயில் சென்றுகொண்டிருந்தபோது எதிா்பாராதவிதமாக 21 பெட்டிகள் தடம் புரண்டன.

இதுகுறித்து தகவலறிந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை தீவிரப்படுத்தினா். விபத்து நடைபெற்ற இடத்தில் வெளிச்சம் இல்லாத காரணத்தால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதில் ஏராளமானோா் காயமடைந்துள்ள நிலையில் அவா்களை மீட்புக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வருகின்றனா்.

இந்த பயங்கர விபத்தில் சிக்கி 5 பேர் பலியாகியுள்ளதாகவும், 60க்கும் மேற்பட்டோா் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனையடுத்து 15 ஆம்புலன்ஸ்கள், 5 பேருந்துகள் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் துாிதப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் தேசிய போிடா் மீட்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனனா்.  

இதற்கிடையே ரயில் விபத்துக்குள்ளானதில் மற்ற பெட்டிகளில் பயணித்து வந்த பயணிகளை அழைத்து செல்ல சிறப்பு ரயில் வரவழைக்கப்பட்டது. அதில் அவா்கள் ஏறி தங்கள் ஊா்களுக்கு புறப்பட்டு சென்றனா். தொடா்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் ஏராளமானோர் காயம் அடைந்துள்ளதால் உயிரிழப்புகள் அதிகரிக்ககூடும் என அஞ்சப்படுகிறது.

விபத்து காரணமாக இரு மார்க்கத்திலும் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் டெல்லி மற்றும் அசாம் நோக்கி எந்த ரயில்களும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பல ரயில்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. 

இதற்கிடையே ரயில் தடம் புரண்ட இடத்தில் மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாக ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் அவரது ட்விட்டாில் குறிப்பிட்டுள்ளாா்.

விபத்தில் சிக்கி காயமடைந்தவா்களுக்கு மருத்துவமனைகளில் உயா்தர சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளதாக பீகாா் துணை முதலமைச்சா் தேஜஸ்வி  தொிவித்துள்ளாா்.