கோவின் தளத்தில் முன் எச்சரிக்கை டோஸ் தடுப்பூசிக்கு பதிவு தேவையில்லை!

மத்திய அரசின் வழிகாட்டுதல்படி 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டு 39 வாரங்கள் ஆகி இருந்தால், அவர்களுக்கு முறைப்படி கோவின் தளத்தில் இருந்து தகவல் வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவின் தளத்தில் முன் எச்சரிக்கை டோஸ் தடுப்பூசிக்கு பதிவு தேவையில்லை!

பிரதமர் மோடி கிறிஸ்துமஸ் பண்டிகையன்று நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது பேசிய அவர் சுகாதார பணியாளர்களுக்கும், முன் கள பணியாளர்களுக்கும், இணைநோயுடன் போராடும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும் முன்எச்சரிக்கை டோஸ் தடுப்பூசி ஜனவரி 10-ந்தேதி முதல் போடப்படும் என அறிவித்திருந்தார். முன் எச்சரிக்கை டோஸ் தடுப்பூசி போடுவதற்கு யாரும் தங்களை மறுபடியும் கோவின் தளத்தில் பதிவு செய்து கொள்ளத்தேவையில்லை என்று தேசிய சுகாதார ஆணையத்தின் தலைமைச்செயல் அதிகாரி  ஆர்.எஸ்.சர்மா தெரிவித்துள்ளார்.

முன் எச்சரிக்கை டோஸ் தடுப்பூசி போடுவதற்கு பயனாளிகள் தங்களது பழைய கணக்கு எண்ணைப் பயன்படுத்தி நேரம் ஒதுக்கிப்பெற்றுக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. மத்திய அரசின் வழிகாட்டுதல்படி 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டு 39 வாரங்கள் ஆகி இருந்தால், அவர்களுக்கு முறைப்படி கோவின் தளத்தில் இருந்து தகவல் வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 3-வது டோஸ் தடுப்பூசி டிஜிட்டல் தடுப்பூசி சான்றிதழில் இடம் பெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.