CBI வைர விழாவில் ஊழல்வாதிகள் குறித்து பேசிய பிரதமர் மோடி...!

CBI வைர விழாவில் ஊழல்வாதிகள் குறித்து பேசிய பிரதமர் மோடி...!

ஊழல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்க எந்தத் தயக்கமும் கூடாது என CBI வைர விழாவில் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.


மத்திய புலனாய்வு அமைப்பான CBI தொடங்கப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, டெல்லியில் CBI வைர விழா நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவை ஊழலில் இருந்து விடுவிப்பதே CBI-ன் முக்கியப் பொறுப்பு எனவும், இதனாலேயே சிபிஐ விசாரணை கோரி மக்கள் போராட்டம் நடத்துகிறார்கள் எனவும் கூறினார். 

இதையும் படிக்க : மாணவிகள் புகார் கூறிய ஆசிரியர்களுக்கு கல்லூரிக்குள் அனுமதியில்லை...மாநில மகளிர் ஆணைய தலைவி அறிவிப்பு!

பல ஆண்டுகளாக அரசின் ஒரு பகுதியாக இருந்த ஊழல்வாதிகள், தற்போது சில மாநிலங்களில் ஆட்சி செய்து வருவதாகக் குறிப்பிட்டார். மேலும் அப்படி ஆட்சி செய்யும் ஊழல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து, எந்த ஊழல்வாதியும் தப்பிவிடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் கூறினார். 10 ஆண்டுகளுக்கு முன் CBI ஆதரவுடன் பெரும் ஊழல்கள் நடைபெற்றதாகவும், 2014ம் ஆண்டிற்குப்பின் ஊழல், கருப்புப் பணத்திற்கு எதிராக பாஜக அரசு திறமையுடன் செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.