சந்திரயான் 3 குறித்து அடுத்தகட்ட அப்டேட்..! - இஸ்ரோ அறிவிப்பு.

சந்திரயான் 3 குறித்து அடுத்தகட்ட அப்டேட்..! - இஸ்ரோ அறிவிப்பு.

சந்திரயான் 3 விண்கலத்தை 4வது புவி சுற்றுவட்டப்பாதைக்கு உயர்த்தும் பணி வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்யும் வகையில் 615 கோடி ரூபாய் செலவில், கடந்த 14ம் தேதி சந்திரயான் 3 விண்கலத்தை இஸ்ரோ விண்ணில் ஏவியது.

புவியை 5 முறை சுற்றி வந்து, நிலவின் சுற்றுவட்டப் பாதைக்கு சென்று, ஆகஸ்ட் 21ம் தேதி நிலவில் தரையிரங்கும் என கூறப்பட்டது.

 

இந்நிலையில் 4ம் வட்டப்பாதைக்கு சந்திரயான் 3 செலுத்தப்பட்டு, சர்வதேச சந்திர தினத்தை சந்திரனுக்கு மிக அருகில் இந்தியா கொண்டாடுவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

இதையும் படிக்க   |  ஆன்லைன் சூதாட்டம்: "மக்களின் உயிரிழப்பு குறித்து மத்திய அரசுக்கு கவலையில்லை" அமைச்சர் ரகுபதி காட்டம்!