விமானத்தில் சக பயணிக்கு முதலுதவி அளித்த மத்திய இணை அமைச்சர் பகவத் கரத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு...

தன்னுடன் விமானத்தில் பயணித்த சக பயணிக்கு முதலுதவி அளித்த மத்திய இணை அமைச்சர் பகவத் கரத்தை, பிரதமர் மோடி வெகுவாக பாராட்டியுள்ளார்.

விமானத்தில் சக பயணிக்கு முதலுதவி அளித்த மத்திய இணை அமைச்சர் பகவத் கரத்துக்கு  பிரதமர் மோடி பாராட்டு...

மருத்துவரும், மத்திய நிதித்துறை இணை அமைச்சருமான பகவத் கரத், நேற்று டெல்லியிலிருந்து விமானம் மூலம் மும்பை சென்றார். அவரது விமானம் டெல்லியிலிருந்து புறப்பட்டு நடுவானில் பயணித்தபோது,சக பயணி ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனைக்கண்ட பகவத் உடனடியாக அந்த பயணியிடம் சென்று அவரது உடல்நலத்தை ஆராய்ந்து, ஊசி போட்டு முதலுதவி சிகிச்சை அளித்துள்ளார். அவரது சேவையை உடன் பயணித்தவர்கள் வெகுவாக பாராட்டினர். இந்தநிலையில் இந்த செய்தி அறிந்து டிவிட்டரில் வாழ்த்திய பிரதமர் மோடி,பகவத் கரத் மனதளவில் எப்போதும் தன்னை ஒரு மருத்துவராகவே கருதிவருவதாக குறிப்பிட்டிருந்தார்.