பஞ்சாப்பில் பிரதமரின் பாதுகாப்பில் குளறுபடி: ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் 4 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு...

பஞ்சாப் பயணத்தின் போது பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடிகள் குறித்து விசாரணை நடத்த உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் 4 பேர் கொண்ட விசாரணை குழு-வை உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது.

பஞ்சாப்பில் பிரதமரின் பாதுகாப்பில் குளறுபடி: ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் 4 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு...

பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக சாலை மார்க்கமாக பயணித்த பிரதமரின் கார் போரட்டகாரர்களால் இடைமறிப்பட்டது. இதனால் சுமார் 15 நிமிடங்களுக்கு மேலாக சாலையில் காத்திருந்த பிரதமர் மோடி பின் அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு  திரும்பினார். 

இதுகுறித்து மூத்த வழக்கறிஞர் மன்விந்தர்சிங் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு பின்னணியில் பஞ்சாப் அரசு இருப்பதாக மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதத்தை முன் வைத்தார்.

மேலும் இது தொடர்பாக விளக்கம் அளிக்கும் படி பஞ்சாப் டிஜிபி மற்றும் தலைமைச் செயலருக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். இதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்த நீதிபதிகள் அமர்வு அனைத்து விசாரணைகளையும் மத்திய அரசே முன்னெடுக்குமானால் நீதிபதிகள் அடங்கிய அமர்வு எதற்கு என கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து மத்திய மற்றும் மாநில அரசுகளின் சார்பான நடத்தப்பட்டு வரும் அனைத்து விசாரணைகளையும் உடனடியாக ரத்து செய்வதாக அறிவித்த நீதிபதிகள்,பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடிகள் குறித்து ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் 4 பேர் அடக்கிய  விசாரணை குழு அமைக்கப்படும் என அறிவித்தது. மேலும் இவ்விவகாரத்தில் பஞ்சாப் மாநில ஏடிஜிபி தகுந்த விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.