இறுதி பட்டியல் வெளியீடு...நிராகரிக்கப்பட்ட வேட்புமனு...யாருக்கும் யாருக்கும் மோதல்!

இறுதி பட்டியல் வெளியீடு...நிராகரிக்கப்பட்ட வேட்புமனு...யாருக்கும் யாருக்கும் மோதல்!

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திரிபாதியின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 


காங்கிரஸ் தலைவர் தேர்தல் வரும் 17-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் இதில் போட்டியிடுவதற்காக மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கேரள எம்.பி சசிதரூர் மற்றும் ஜார்கண்ட் முன்னாள் முதலமைச்சர் கே.என் திரிபாதி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.  

இதனால் மும்முனைப் போட்டி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்தநிலையில் இன்று இறுதி வேட்பாளர் பட்டியலை அறிவித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தேர்தல் ஆணையத் தலைவர் மதுசூதன் மிஸ்திரி,   கே.என்.திரிபாதியின் படிவம் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளை பூர்த்தி செய்யபடாததால் நிராகரிக்கப்பட்டதாக கூறினார்.

இதையும் படிக்க: இனி நாங்கள் ஜீரோ இல்லை ஹீரோ...ஜெயக்குமாருக்கு தக்க பதிலடி தந்த வைத்திலிங்கம்!

இதனால் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சசிதரூர் ஆகியோர் தலைவர் தேர்தல் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். இருவருமே தென் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தான் என்றாலும், சோனியா காந்தியின் முழு ஆதரவு கார்கேவுக்குத்தான் என்பது வெளிப்படையாக உள்ளது. 

அதனால் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக பழுத்த அரசியல்வாதியான மல்லிகார்ஜுன கார்கே தேர்ந்தெடுக்கப்படுவது உறுதி எனக் கூறப்படுகிறது. முன்னதாக சோனியாவைச் சந்தித்த அவர், ஒருவருக்கு ஒரு பதவி என்ற காங்கிரசின் கொள்கைப்படி தனது எதிர்க்கட்சித் தலைவர் பதவி ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தார்.  அதனைத் தொடர்ந்து  டெல்லியில் உள்ள கேரள பவனில் முன்னாள் அமைச்சர் ஏ.கே.அந்தோணியை நேரில் சந்தித்து ஆதரவு கோரினார். இதனையடுத்து, யார் காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்பதில் மல்லிகார்ஜூன கார்கேவுக்கும், சசிதாரூர்க்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.