கிட்டி குமாரமங்கலத்தை கொலை செய்தவர் கைது... 

முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவி கிட்டி குமாரமங்கலத்தை கொலை செய்த கொலையாளி கைது.

கிட்டி குமாரமங்கலத்தை கொலை செய்தவர் கைது... 

முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவியும், வழக்கறிஞருமான கிட்டிகுமாரமங்கலத்தை கொலை செய்தவரை மத்திய பிரதேச காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த  6-ம் தேதி தென்மேற்கு டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் கிட்டி குமாரமங்கலம் மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டார்.  இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த டெல்லி காவல்துறையினர், கொலைக்கு உடந்தையாக இருந்த வீட்டுப் பணிப்பெண்ணை ஏற்கனவே கைது செய்து விசாரித்து வந்தனர்.  

இந்நிலையில் தலைமறைவாக இருந்த கொலையாளியை மத்தியப் பிரதேசத்தில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து  33 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகள் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.