கர்நாடக தேர்தல்: 3ம் கட்ட தேர்தல் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்...!

கர்நாடக தேர்தல்: 3ம் கட்ட தேர்தல் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்...!

கர்நாடக சட்டப்ரேவைத் தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.

கர்நாடகாவில் வரும் 10ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் நிலையில், 43 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை 3 ஆம் கட்ட பட்டியலாக புதிதாக காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.

இதையும் படிக்க : அண்ணாமலை ஊழல் பட்டியலை தனிப்பட்ட முறையில் வெளியிட்டாரா? பாஜக கட்சி தலைவராக வெளியிட்டாரா?

இதில் காங்கிரஸில் இணைந்த பாஜக மூத்த தலைவர் லக்ஷ்மண் சாவடிக்கு அதானி தொகுதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், இருமுறை வெற்றியடைந்த கோலார் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா போட்டியிடுவதற்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. அவருக்கு பதிலாக அந்த தொகுதியில் கோத்தூர் ஜி.மஞ்சுநாத் போட்டியிட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 209 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் இதுவரை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.