கங்கனாவின் பத்மஸ்ரீ விருதை திரும்பப் பெற வேண்டும் - சீக்கிய அமைப்பினர் குடியரசு தலைவருக்கு கடிதம்

நடிகை கங்கனாவின் பத்மஸ்ரீ விருதை திரும்பப் பெறக் கோரி டெல்லி சீக்கிய அமைப்பினர் குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற்றது குறித்து நடிகை கங்கனா சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இது விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் கங்கனா தனது டுவிட்டர் பக்கத்தில் விவசாயிகள், சீக்கியர்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததற்காக கங்கனாவின் பத்மஸ்ரீ விருதை திரும்பப் பெறக் கோரி டெல்லி சீக்கிய அமைப்பினர் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில், விவசாயிகள், சீக்கியர்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களை அவமதித்ததாகவும், 1984 ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தை குறிப்பிட்டு கங்கனா வேண்டுமென்றே சீக்கியர்களை தூண்டி விடுவதாகவும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.