கங்கனா ரனாவத்தை மனநல மருத்துவமனையில் சேருங்கள் - சிரோன்மணி அகாலிதள கட்சித்தலைவர் சாடல்...

நடிகை கங்கனா ரனாவத்தை சிறையில் அடையுங்கள்.. இல்லையேல் மனநல மருத்துவமனையில் சேருங்கள் - சிரோன்மணி அகாலிதள கட்சித்தலைவர் மஜிந்தர் சாடல்

கங்கனா ரனாவத்தை மனநல மருத்துவமனையில் சேருங்கள் - சிரோன்மணி அகாலிதள கட்சித்தலைவர் சாடல்...

நடிகை கங்கனா ரனாவத்தை சிறைசாலையில் அல்லது மனநல மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என சிரோன்மணி அகாலி தள கட்சி தலைவர் மஜிந்தர் சிங் சிர்ஸா கூறியுள்ளார்.

3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் மத்திய அரசின் முடிவினை பல்வேறு தரப்பினரும் வரவேற்றிருந்த நிலையில், நடிகை கங்கனா ரனாவத் தனது அதிருப்தியை இன்ஸ்டாகிராமில் வாயிலாக வெளிப்படுத்தியிருந்தார். 

இந்தநிலையில் அவரது வெறுப்புணர்வை தூண்டும் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மஜிந்தர் சிங் சிர்ஸா, அவருக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு மற்றும் பத்ம ஸ்ரீ விருதினை திரும்ப பெற வேண்டும் என கூறியுள்ளார். அதுமட்டுமல்லாது அவருக்கு எதிராக டெல்லி போலீசிலும் டிவிட்டர் வாயிலாக புகார் செய்துள்ளார்.