ஒமிக்ரான் வைரஸ் பரவல் எதிரொலி... வெளிநாட்டு பயணிகளுக்கு எல்லையை மூடிய இஸ்ரேல்...

உருமாற்றம் அடைந்துள்ள ஒமிக்ரான் வைரஸ் பரவல் காரணமாக, சர்வதேச நாடுகளுடனான விமான போக்குவரத்து சேவையை இஸ்ரேல் தற்காலிகமாக நிறுத்திக்கொண்டுள்ளது. 

ஒமிக்ரான் வைரஸ் பரவல் எதிரொலி... வெளிநாட்டு பயணிகளுக்கு எல்லையை மூடிய இஸ்ரேல்...

தென் ஆப்ரிக்காவில் காணப்பட்ட உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் இங்கிலாந்து, இஸ்ரேல், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸுக்கு ஒமிக்ரான் என பெயர் வைத்துள்ள உலக சுகாதார அமைப்பு, இதன் வீரியத்தை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, தென்ஆப்ரிக்காவில் இருந்து வரும் பயணிகளுக்கு பல்வேறு நாடுகள் அனுமதி மறுத்துள்ளது. இந்தநிலையில் புதிய தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, சர்வதேச நாடுகளுடனான விமான போக்குவரத்து சேவையை இஸ்ரேல்  நிறுத்தியுள்ளது.