சிங்கப்பூருக்கு வர இந்தியர்களுக்கு அனுமதி…

சிங்கப்பூருக்கு வர இந்தியர்களுக்கு அனுமதி…

கட்டுமானம், கடல்துறை, செய்முறைத் தொழில்துறை ஆகிய ல் கீழ் பணிபுரியும் இந்தியாவை சேர்ந்த ஊழியர்கள் இம்மாதத்தில் இருந்து சிங்கப்பூருக்கு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக வெளிநாட்டு ஊழியர் வரத்து குறைந்ததால் கட்டுமானம், கடல்துறை, செய்முறைத் தொழில்துறை துறைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பங்ளாதேஷ், நேபாளம், பாகிஸ்தான், இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளுக்கு அண்மையில் சென்றவர்கள் சிங்கப்பூருக்குள் நுழைய இப்போதைக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.

கொரோனா பரவத் தொடங்கியதில் இருந்து நிறுவனங்கள் எதிர்கொண்டு வரும் கடுமையான நெருக்கடிகளைத் தணிக்கும் விதமாக, அதிகமான வெளிநாட்டு ஊழியர்களும் இல்லப் பணிப்பெண்களும் சிங்கப்பூர் வர விரைவில் அனுமதிக்கப்படுவர் என்று வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங் சென்ற மாதம் தெரிவித்திருந்தார்.

அந்த வகையில், கட்டுமானம், கடல்துறை, செய்முறைத் தொழில்துறை ஆகிய ல் கீழ் பணிபுரியும் இந்தியாவை சேர்ந்த ஊழியர்கள் இம்மாதத்தில் இருந்து சிங்கப்பூருக்கு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.