இந்திய நிறுவனங்கள் டாப் 5 இடத்தில் இருக்க வேண்டும்... ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு...

உலகளவில் இந்திய நிறுவனங்கள் முதல் ஐந்து இடங்களை பிடிக்க தேவையான நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்திய நிறுவனங்கள் டாப் 5 இடத்தில் இருக்க வேண்டும்... ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு...

2022-23-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தயாரிப்பு பணிகள் தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு துறைகளை சேர்ந்த முன்னணி நிறுவனங்களின் தலைவா்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். வங்கிகள், உள்கட்டமைப்பு,  வாகனங்கள், தொலைத்தொடர்பு, நுகர்வோர் பொருட்கள், ஜவுளி, தொழில்நுட்பம், சுகாதாரம், விண்வெளி, மின்னணுவியல் உள்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் முன்னணி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன், பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.  இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது, இந்தியாவில் உள்ள தொழில் வாய்ப்புகள் மற்றும் மத்திய அரசின் எதிர்பார்ப்புகள் உள்ளிட்டவை குறித்து பிரதமர் விளக்கம் அளித்துள்ளார்.  

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவாடா குழுமத்தின் தலைவர் வினீத் மிட்டல், உலகம் முழுவதும் அனைத்து பிரிவுகளிலும் இந்திய நிறுவனங்கள் டாப் 5 இடத்தில் இருக்க வேண்டும் என்பது பிரதமர் மோடியின் கனவு என்றும்,  அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளை எடுக்கவும் மற்றும் அதற்கான சூழலை உருவாக்கவும் அரசு தயாராக உள்ளதாகவும் கூறியுள்ளார். சிறந்த தொலைநோக்கு பார்வையில் வருங்கால சந்ததியினரை கருத்தில் கொண்டு பிரதமர் மோடி செயல்படுவதாக, இந்தியாவிற்கான சாம்சங் நிறுவன மூத்த துணைத் தலைவர் மனு கபூர் தெரிவித்துள்ளார்.