இந்தியாவும் நாங்களும் நண்பர்கள் :“இந்தியா வாங்க விரும்பும் எதையும் கொடுக்க தயார்” - ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர்!!

இந்தியாவும் நாங்களும் நண்பர்கள் என்றும் இந்தியா வாங்க விரும்பும் எதையும் கொடுக்க நாங்கள் தயாராக உள்ளதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

இந்தியாவும் நாங்களும் நண்பர்கள் :“இந்தியா வாங்க விரும்பும் எதையும் கொடுக்க தயார்” - ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர்!!

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர், உலக நாடுகளின் அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் போரில் இந்தியாவை தங்கள் பக்கம் கொண்டுவர அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் மற்றும்  ரஷ்யாவும் முயற்சித்து வருகின்றன.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், இந்தியா வந்த ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இதனையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த செர்ஜி லாவ்ரோவிடம், தள்ளுபடி விலையில் இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், இந்தியா வாங்க விரும்பும் எதையும் கொடுக்க நாங்கள் தயாராக உள்ளோம் என்றும் நாங்கள் நண்பர்கள் என்றும் தெரிிவத்தார். தொடர்ந்து பேசிய செர்ஜி லாவ்ரோவ், இருநாடுகளும் அவரவர் பண நாணயங்களிலேயே வர்த்தகம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.