வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவுத் தொகை உயர்வு : மத்திய சட்ட அமைச்சகம்  உத்தரவு!!

வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவுத் தொகையை அதிகரித்து, மத்திய சட்ட அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 

வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவுத் தொகை உயர்வு : மத்திய சட்ட அமைச்சகம்  உத்தரவு!!

நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலின் போது வேட்பாளர்கள் குறிப்பிட்ட தொகையை செலவு செய்ய அனுமதிக்கப்படுவது வழக்கம். அந்த தொகையை மத்திய சட்ட அமைச்சகம் தற்போது உயர்த்தி அறிவித்துள்ளது.  அதன்படி, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர் செலவுத் தொகைக்கான உச்சவரம்பு 70 லட்சம் ரூபாயாக இருந்தது. தற்போது, அந்த தொகையானது 95 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

மற்ற மாநிலங்களுக்கு 54 லட்சம் ரூபாயாக இருந்த உச்ச வரம்பு தற்போது, 75 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.  இதேபோல்  சட்டப்பேரவைத் தேர்தலின் போது, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கான வேட்பாளர் செலவுத் தொகை உச்ச வரம்பு 28 லட்சம் ரூபாயாக இருந்தது. இது தற்போது,  40 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் 20 லட்சம் ரூபாயாக இருந்த உச்சவரம்பு, 28 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.