மகராஷ்டிராவில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம்- வானதி சீனிவாசன் கண்டனம்

மகராஷ்டிராவில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம்- வானதி சீனிவாசன் கண்டனம்

மகராஷ்டிராவில் 16 வயது சிறுமியை, கடந்த 6 மாதங்களில் 400 பேர்  பாலியல் வன்கொடுமை செய்ததற்கு பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மகராஷ்டிராவில், இளம் வயதில் திருமணம் செய்த 16 வயது சிறுமி, கணவர் வீட்டினரின் கொடுமையால் பெற்றோர் வீட்டிற்கு திரும்பியுள்ளார். இந்நிலையில், சிலர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.

இதுகுறித்து புகார் அளிக்க சென்ற காவல் நிலையத்திலும் காவலர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தற்போது வரை 3 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் 2 மாத கர்ப்பிணியாக இருக்கும் சிறுமிக்கு நிகழ்ந்த கொடூர செயலுக்கு வானதி சீனிவாசன் டிவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். அம்மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலை மிக மோசமாக உள்ளதாக குற்றம்சாட்டியுள்ள அவர்,  குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.